2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கோவில் பிணக்குகள், நீதிமன்றம் செல்லாது தடுக்க வேண்டுகோள்

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கோவில் நிர்வாகங்களில் ஏற்படும் பிணக்குகள், நீதிமன்றம் வரை சென்று அவமானப்படுவதைத் தவிர்க்குமுகமாக, மாவட்டமட்டத்தில், புத்திஜீவிகள் அடங்கிய மதியுரைக்குழு நியமிக்கப்படவேண்டுமென, இந்துக் கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனிடம் அம்பாறை மாவட்ட இந்து சமய ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பல கோவில்கள், நீதிமன்றம் செல்வதற்கான ஏற்பாடுகளை எடுத்துவருகின்றன.

இலங்கை நம்பிக்கை கட்டளைச் சட்டத்தின் படி, கோவில் பிணக்குகளைத் தீர்க்கும் அதிகாரம் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அவை உரியகாலத்தில் தீர்த்துவைக்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்வதால் முறைப்பாட்டுக்காரர்கள் வேறுவழியின்றி நீதிமன்றம் சென்று வருகின்றனர். இது தேவையற்ற பணவிரயம் என்பதற்கு அப்பால், கோவில்களுக்கான கௌரவம் இழக்கச்செய்கிறது.

எனவே, இப்படிப்பட்ட பிணக்குகளுக்குத் துரிதத் தீர்வுகளை வழங்க தகுதியான சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் 10 பேர் அடங்கிய மதியுரைக்குழுவை நம்பிக்கைக் கட்டளைச் சட்டத்தின்படி நியமித்து, இந்துக்களின் கௌரவத்தைக் காக்குமாறு அம்பாறை மாவட்ட இந்து சமய ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X