Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

சலீம் றமீஸ்
சர்வதேச முதியோர் தின நிகழ்வு, அம்பாறை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், மாவட்ட மேலதிக செயலாளர் வீ.ஜெகதீஸன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், 2019ஆம் ஆண்டின் சிறந்த முதியோர் அமைப்பாக தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தையும், கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தையும் பெற்ற தமன பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த முதியோர் அமைப்பைக் கௌரவித்து சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் “அன்பும், கருணையும் உள்ள குழந்தைகளே முதியோர் எமது உலகம்” என்ற தலைப்பிலான கட்டுரை வெளியிட்ட மாணவியும் கௌரவிக்கப்பட்டார்.
இதில் அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல். பண்டார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026