Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
சுகாதாரத்துக்கும் கல்விக்குமென இம்முறை கூடுதல் நிதி கிழக்கு மாகாண சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் கல்வி அமைச்சுக்கு 7000 மில்லியன் ரூபாய் நிதி இம்முறை ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்; நஸீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை நிலாமியா ஜூனியர் பாடசாலைக்கு 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 3 மாடிக் கட்டட நிர்மாணப் பணிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில், 'எந்த முறையும் இல்லாத நிதி ஒதுக்கீடு இம்முறை சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. விசேடமாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் பின்தங்கிக் காணப்படும் பிரதேசங்களின் மக்களின் சுகாதாரத்துறையை விருத்தி செய்யவேண்டும் என்ற சிந்தனையில் எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம்முறை 1000 மில்லியன் ரூபாய் நிதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேபோல் கல்வித்துறையையும் அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற நோக்கில் கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிக் காணப்படுகின்ற பல பாடசாலைகளையும் அப்பிரதேசத்திலுள்ள மாணவச் செல்வங்களின் கல்வி நிலையை உயர்த்தவேண்டும் என்ற சிந்தனையில் கிழக்கு மாகாண விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
24 minute ago
2 hours ago