2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சூதாடிய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்,எம்.எஸ்.எம்.ஹனீபா

சூதாடிய குற்றச்சாட்டின் பேரில் 4 பேரை அம்பாறை, பாலமுனை முள்ளிக்குளத்து மலைக்கு அருகில் சனிக்கிழமை (01) மாலை கைதுசெய்ததுடன்,  அவர்களிடமிருந்து பணம், சிகரெட் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்தில் சிலர் சூதாடுவதாக தமக்கு தகவல் கிடைத்த நிலையில், அங்கு சென்று தேடுதல் நடத்தியபோது, மேற்படி 4 பேரும் சூதாடிக்கொண்டிருந்தமை தெரியவந்தது.

இதனை அடுத்து 38, 40, 42, 55 வயதுகளையுடைய இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாகவும் விசாரணையின் பின்னர் இவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இவர்களுக்கு பொலிஸார் பணித்துள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X