2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேட்டுவட்டை வீடுகளைக் கையளிக்கக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேட்டுவட்டைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 65 மீற்றர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை  உரியவர்களிடம் கையளிப்பதற்கு  நடவடிக்கை எடுக்குமாறு மருதமுனை ஷமஸ் நண்பர்கள் வட்டம் 2004 அமைப்பின் தலைவர் பி.எம்.சிபான், இன்று (7) கோரிக்கை விடுத்துள்ளார்.

2007ஆம் ஆண்டு டிசெம்பரில் கட்டி முடிக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டத்திலுள்ள வீடுகள்; இன்னும் முழுமையாகக் கையளிக்கப்படாமல்; உள்ளன.

இந்த வீட்டுத்திட்டத்தில் 184 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்ட போதும்,   178 வீடுகளே நிர்மாணிக்கப்பட்டன.

இந்நிலையில்,  99 வீடுகள் மாத்திரமே சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டன. எஞ்சிய 79 வீடுகளும் கையளிக்கப்படாமல் உள்ளன.

இந்த வீடுகளில் குடியிருக்காமையால் அவ்வீடுகள் பாழடைந்து காணப்படுகின்றன.

இந்த வீடுகளை உரியவர்களுக்கு கையளிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்ட போதும், இந்த வீடுகளை கையளிப்பதற்கான நடவடிக்கை இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .