2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

2015ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை சுகாதார அபிவிருத்தித் திட்டத்தை முன்னிட்டு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் வழிகாட்டலுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பாதுகாப்பு சம்பந்தமான தர நிர்ணய பரிசீலனை வேலைத்திட்டத்துக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை(12) காலை 10 மணிக்கு  பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.கலீல் றகுமான் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ்,கௌரவ அதிதிகளாக அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாத் மற்றும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி  ஏ.எல்.எம்.அலாவுதீன் மற்றும் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X