2025 மே 19, திங்கட்கிழமை

சாய்ந்தமருதுப் பிரதேசப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல்.எம்.ஷினாஸ்

சாய்ந்தமருதுப் பிரதேசப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் பாடசாலை ஒன்றின் அபிவிருத்திக்கு 2 கோடி ரூபாய் படி நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும்  வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் அபிவிருத்தி வேலைகள் அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு இன்று (12) வெள்ளிக்கிழமை  இடம்பெற்றது.

அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X