Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜனவரி 31 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் ஆயுதங்களுடன் கொள்கலன் ஒன்று மீட்கப்பட்டதாக அம்பாறை புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
சாய்ந்தமருது -16 அல் அமானா வீதியை அண்டி அமைந்துள்ள வளவொன்றில் மலசலகூடத்துக்கான குழி தோண்டிக்கொண்டிருந்தபோது, ஆயுதங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த கொள்கலனை மேசன் தொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதைத்; தொடர்ந்து அங்கு விரைந்த புலனாய்வுப் பொலிஸாரும் கல்முனை பெருங்குற்றப் பிரிவுப் பொலிஸாரும் இணைந்து ஆயுதக் கொள்கலனை மீட்டனர்.
அந்தக் கொள்கலனிலிருந்து கைக்குண்டு ஒன்று, ரீ-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் சன்னங்கள் 32, ரீ 84 எஸ் ரவைகள் 44, எஸ்.எல்.ஆர். துப்பாக்கி ரவைகள் 9, ஒன்பது மில்லிமீற்றர் துப்பாக்கி ரவைகள் 9, 38 றிவோல்வர் ரக துப்பாக்கி ரவைகள் 9 ஆகியவை மீட்கப்பட்டன.
இது தொடர்பில் அம்பாறை புலனாய்வுப் பொலிஸாரும் கல்முனை பெருங்குற்றப் பிரிவு பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
36 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago