2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே. றஹ்மத்துல்லா

தங்கை முறையான 14 வயதுச் சிறுமியை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த 28 வயது மதிக்கத்தக்க சந்தேகநபரை, செம்டெம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.எல். அப்துல் றசீட், இன்று வியாழக்கிழமை (18) உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேகநபர், தனது தந்தையின் இரண்டாவது மனைவியின் மகளைத் துஷ்பிரயோகம் செய்ததாக தந்தையினால் கடந்த 2015ஆம் ஆண்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டையடுத்து மேற்படி சந்தேகநபர் தலைமறைவாகி இருந்து வந்த நிலையில் பாலமுனைப் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் நேற்றுப் புதன்கிழமை (17) இரவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X