Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
சிறுவர்கள் ஒரு நாட்டின் முக்கிய சொத்தாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பிறக்கும் போது நல்லவர்களாவே பிறக்கின்றனர்.
இவ்வாறானவர்களை நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் உருவாக்குவது பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்திட்டத்துக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கிராம மட்டத்திலான சிறுவர் பாதுகாப்பும் விரிவாக்கற் செயற்திட்டமும் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை 16ஆம் பிரிவின் கிராம அபிவிருத்திச் சங்க கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
சமூகத்திலுள்ள ஒவ்வொரு பொறுப்புதாரர்களும் சிறுவர்களின் பாதுகாப்பு, அவர்களது உரிமைகள் தொடர்பில் முதலில் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
வறுமை காரணமாக வெளிநாடு செல்லும் பெண்களைவிட உலக ஆசைகளில் ஈர்க்கப்பட்டுள்ளதன் காரணமாகவே அதிகமான பெண்களும் ஆண்களும் வெளிநாட்டு வேலைப்புக்காக செல்லுகின்ற நிலை இன்று சமூகத்தில் காணப்படுகின்றது.
இதனால் குழந்தைகள், சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதுடன் இது ஒரு சமூகப் பிரச்சினையாகவும் பரிணாமம் பெற்று வருகின்றது.
நாம் எமது கலை,கலாசாரங்களை மறந்து உலகத்தின் பக்கம் செல்லுவதனாலேயே எமக்கான வருமானம் போதுமானதாக அமைவதில்லை.
தேவையற்ற செலவீனங்களிலிருந்து நாம் விடுபட்டு ஒரு சவாலாக எமது வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என்றார்.
7 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago