எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை - பொத்துவில் பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்து, புதிதாக நவீனமான முறையில், சகல வசதிகளுடன் நிர்மாணிப்பதற்கு, கிழக்கு மாகாண போக்குவரத்துச் சபையினால், 81 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் இன்று (30) தெரிவித்தார்.
இதற்கான, அனுமதியை, இலங்கை போக்குவரத்துச் சபை வழங்கியுள்ளதுடன், குறித்த பஸ் நிலையமானது, இலங்கை போக்குவரத்து சபைக்கு அருகாமையில் அமைந்துள்ள காணியில், 1.5 ஏக்கர் பரப்பில் அமையப்பெறவுள்ளது. இக்காணி, பொத்துவில் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026