Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவையே நிறுத்தி வெற்றி பெறச் செய்ய முஸ்லிம் மக்கள் தன்னிடம் விருப்பம் தெரிவித்ததாக, சுகாதார போசணை, சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் தெரிவித்தார்.
அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில், செமட்ட செவன 267ஆவது அல்மினா மாதிரிக் கிராம வீடமைப்புத் தொகுதித் திறப்பு விழா, நேற்று (31) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சஜித் பிரேமதாசவுக்கு நாட்டை ஆழுகின்ற ஆளுமை இல்லையென்று இன்று சிலர் கூறுகின்றார்கள் எனவும் அப்படியானால் தற்போதைய ஜனாதிபதி எப்படி வந்தார், அவர் சாதாரண ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் அமைச்சராகி, ஜனாதிபதியாக வந்தவர் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், தேசிய அரசாங்கம் அமைத்தபோது, அவரை ஜனாதிபதி வேட்பாளராகக் கொண்டு வந்த போது, அவர் என்ன செய்திருந்தார் எனக் கேள்வியெழுப்பிய, இராஜாங்க அமைச்சர் பைசால் காசீம், அமைச்சர், ஜனாதிபதி என்பதெல்லாம் பதவிக்கு வருகின்ற போது, அதன் கட்டமைப்புகளை அமைத்துக் கொள்ள முடியுமென்றார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தல் டிசெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இந்நிலையில், ஏழை மக்களுடன் மக்களாக இருந்து நாடு முழுவதும் சேவை செய்யக்கூடிய ஒருவரை நாம் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago