2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 12 பேருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 04 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 12 நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை  அபராதமாக கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பாயாஸ் றஸாக், இன்று வெள்ளிக்கிழமை (04) விதித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை தலைமைக் காரியாலய புலனாய்வுப் பிரிவினரும் கல்முனை பொலிஸாரும் இணைந்து கடந்த வாரம் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, சட்டவிரோதமாக தனது வீட்டுக்கு மின்சாரம் பாவித்துவந்த நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வழக்கு விசாரணை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று (04) எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன்,  இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டஈட்டினை செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .