2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத அங்காடிகளை அகற்றும் நடவடிக்கை

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சட்டவிரோத வியாபாரத் தலங்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள பணிப்புரைக்கமைவாக, மாநகர சபையின் வருமான பரிசோதகர்கள் நேற்று (07) முதல் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதான வீதிகளிலும் உள்ளூர் வீதிகளிலும் சட்டவிரோதமாக பலகை, மேசை மற்றும் கொட்டகை அமைத்து மீன், மரக்கறி, பழ வகைகள், இளநீர் மற்றும் இதர பொருட்களின் வியாபார நடவடிக்கைகளால் வாகனப் போக்குவரத்துகளுக்கும் பாதசாரிகளுக்கும் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டு வருவது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்தே, இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகையால், சம்மந்தப்பட்டவர்கள், இச்சட்டவிரோத அங்காடிகளில் இருந்து உடனடியாக தவிர்ந்துக் கொள்வதுடன், தமது வியாபாரத் தலங்களை அகற்றிச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வறிவுறுத்தலை மீறி வியாபாரத்தில் ஈடுபடுவோரின் தளபாடங்கள் மற்றும் பொருட்கள் கையகப்படுத்தப்படும் என்பதுடன், சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீதியோரங்களிலும் நடைபாதைகளிலும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்கள் தாங்கிய விளம்பரப் பலகைகளும் பொருட்களும் காட்சிப்படுத்தப்படுவதால் பாதசாரிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன், விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துக் காணப்படுவதால், குறித்த வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக மாநகர மேயர் றகீப் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X