2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறைப் பிரதேச சபையை நகரசபையாகத் தரம் உயர்த்துவது தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 02 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

சம்மாந்துறைப் பிரதேச சபையை நகரசபையாகத் தரம் உயர்த்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பிலும்; சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மிக நீண்டகாலமாக காணி உத்தரவுப்பத்திரங்கள் இல்லாத குடும்பங்களுக்கு காணி உத்தரவுப்பத்திரங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை தொடர்பிலும்; ஆராயப்பட்டுள்ளன.  

சம்மாந்துறைப் பிரதேச செயலகத்துக்கான  அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அப்பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (01) திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத்; தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூரின் தலைமையில் நடைபெற்றது.

சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 600 பேர் காணி உத்தரவுப்பத்திரங்கள் இல்லாமல் உள்ளனர். இந்நிலையில், முதற்கட்டமாக 570 பேருக்கு  காணி உத்தரவுப்பத்திரங்களை வழங்குவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயங்கள்; தொடர்பில் துறை சார்ந்தவர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், மேற்படி விடயங்கள் தொடர்பில் துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்திகளுக்காகவும் மக்களின்; நலனுக்காகவும் மக்கள் பிரதிநிதிகளால் ஒதுக்கப்படும் நிதியை உரிய முறையில் பயன்படுத்தி திட்டங்களை வெற்றி அடையச் செய்வதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க  வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்;  கேட்டுக்கொண்டார்.

மேலும், சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  தொடர்பிலும்; ஆராயப்பட்டதுடன், அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதமாக முடிக்குமாறும்  சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .