Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 25 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்கா அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஊடகச் செயலமர்வு, எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
ஆரோக்கியம் மிக்க ஊடக சமூகத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பத்திரிகைத்துறை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்தியாளராகவும் அறிவிப்பாளராகவும் செயற்பட விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் இச்செயலமர்வு அமையும் என லக்ஸ்டோ அமைப்பின் தலைவர் மருதூர் அன்சார் தெரிவித்தார்.
இச்செயலமர்வில் க.பொ.த சாதாரணதர, உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்ள முடியும் என்பதுடன், இதில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதுவரை பதிவு செய்யாதவர்கள் 0779322797 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago