2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறையில் சுகாதாரத்துறைக்கான வளப்பங்கீட்டில் பாராபட்சம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, றியாஸ் ஆதம்

அம்பாறை. சம்மாந்துறைப் பிரதேசத்தில் சுகாதாரத்துறைக்கான வளப் பங்கீடுகள் முறையாக மேற்கொள்ளப்படாது பாராபட்சம் காட்டப்படுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோதேஇ அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்  'மத்திய அரசாங்கத்தினதும் கிழக்கு மாகாண சபையினதும் சுகாதாரத்துறை சார்ந்த வளப்பங்கீடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் சம்மாந்துறைப் பிரதேசத்துக்கு பாராபட்சம் காட்டப்படுகின்றமை உடனடியாக  நிறுத்தப்பட வேண்டும்.  ஏனைய பிரதேசங்களில் சுகாதாரத்துறைக்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகள்இ சம்மாந்துறைப் பிரதேசத்திலும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X