2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்களை, இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதிவான் நீதிமன்று  உத்தரவிட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை   (10) கொரோனா  வைரஸ் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு  உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு  கடமைக்கு சென்ற  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை,  சிலர் இணைந்து தாக்கியதுடன், தலைமறைவாகி இருந்தனர்.

இந்நிலையில், கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார், பொதுமக்களின் உதவியுடன் தலைமைறைவாகி இருந்த இரு சந்தேக நபர்களை, திங்கட்கிழமை (13) கைது செய்ததுடன், கல்முனை நீதிவான் நீதிமன்றில் நேற்று (14) ஆஜர்படுத்தப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X