Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, அக்கரைப்பற்று நகருக்கு வரும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து சமூக இடைவெளியைப் பேணுமாறு, அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் சக்கி வலியுறுத்தியுள்ளார்.
நாளை (28) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது, சன நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக அக்கரைப்பற்று சிறுவர் பூங்கா, அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் தற்காலிக சந்தை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
மாநகர சபைக்குட்பட்ட பொதுச் சந்தை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தொடர்ந்தும் மூடப்பட்டிருக்குமெனவும், தெரிவித்தார்.
“பொலிஸார், சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி, பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி பேணி தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை கொள்வனவு செய்ய வேண்டும்.
வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சமூக இடைவெளியைப் பேணும் முகமாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும், தவறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.
மேற்படி அறிவுறுத்தல்களை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றுவதன் மூலம் எமது பகுதியில் கொடிய ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் பரவலை முற்றாக தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுள்ளார்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற போது, அவசியத் தேவையின்றி பொதுமக்கள் எவரும் வீட்டில் இருந்து வெளியேறி, வீதிகளில் நடமாட வேண்டாமெனவும், மாநகர மேயர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago
13 May 2025