2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சமூக நல்லிணக்கத்துக்காக இணைந்த இளைஞர்கள்

Freelancer   / 2023 மார்ச் 07 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

சமூக நல்லிணக்கத்துக்காக இணைந்த இளைஞர்கள் சிலர், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிலையத்துக்கு ஒருநாள் கள விஜயத்தை அண்மையில் மேற்கொண்டனர். 
GCERF HELVETAS நிதியுதவியுடன், GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நல்லிணக்க விஜயம் இடம்பெற்றது.

கப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டத்தில்  உள்ள 08 பிரதேச செயலகங்களில் இருந்து 04 மதங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட இளைஞர் - யுவதிகள் பங்கேற்றனர். 

அம்பாறை மாவட்ட இளைஞர்களை, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அன்பாக வரவேற்றதுடன், ஒன்றாக கலந்து சமூக நல்லிணக்கம், வன்முறை, தீவிரவாதம் தவிர்த்தல், வாழ்வியல் பற்றிய விளக்கங்களும் கல்வி அதனுடைய சிறப்பம்சங்களும் இடம்பெற்றதுடன், திறன் விருத்தி சார் உளவியல் பயிற்சியும் இங்கு வழங்கப்பட்டன. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X