Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஜூலை 09 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தர் தெரிவில், சம்பந்தப்பட்ட கல்விமான்கள், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் திறந்த மனதுடன் கடந்துரையாடி, சமூகநலன், கல்வி மேம்பாட்டு நலன் என்பனவற்றை கருத்திற்கொண்டு, ஆரோக்கியமான முடிவெடுக்க வேண்டுமென, கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை குறிப்பிட்டுள்ளது.
பேரவையின் ஊடக இணைப்பாளர், விரிவுரையாளர் அஷ்-ஷெய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா (நழீமி), இன்று(09) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், அப்பல்கலைக்கழகத்தில் அண்மைக்காலத்தில் காணப்படும் சர்ச்சைகள் தொடர்பாக, தனது கவனத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் அதீத முயற்சியில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவானதைச் சுட்டிக்காட்டிய அவர், அங்கு ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பிலும் சர்ச்சைகள் தொடர்பிலும், ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருவது தொடர்பிலும், கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை கரிசனை கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வாக, நிறைவேற்று அதிகாரி திருமதி உமா குமாரசுவாமி நியமனம் செய்யப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம்.
“அதேபோன்று, விரைவில் இடம்பெறவுள்ள புதிய உபவேந்தர் நியமனத்தின் மூலம், தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பிரச்சினைகள், சர்ச்சைகள் ஆகியன முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமெனவும், பேரவை எதிர்பார்க்கின்றது.
“தென்கிழக்குப் பல்கலைக்கழகம், சமூகநல மேம்பாடுகளுக்கும், தேசத்தைக் கட்டியெழுப்பும் முற்போக்கு நடவடிக்கைகளுக்கும் எதிர்காலத்தில் உந்து சக்தியாக அமைய வேண்டுமென, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிவில் சமூக அமைப்புகள் எதிர்பார்க்கின்றது” என, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
23 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago