2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சமூர்த்திக் கொடுப்பனவு கையளிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட வறுமை கோட்டின் கீழ்யுள்ள சுமார் 1,191 சமூர்த்திப் பயனாளிகளுக்கு சமூர்த்திக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு, பொத்துவில் சமூர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம் தலைமையில், இன்று (15) சமூர்த்தி வங்கிகளான வடக்கு,தெற்கு வங்கிகளின் ஊடாக கொடுப்பனவு நிதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்து கொண்டு, சமூர்த்திப் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 1,191 பேருக்கான ஓகஸ்ட் மாதத்துக்கான கொடுப்பனவுகளை வழங்கி வைத்திருந்தார்.

இதன்போது வடக்கு,தெற்கு  சமூர்த்தி வங்கி முகாமையாளர்களான எஸ்.சசிக்குமார்,எம்.ஏ.றஜீம், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .