2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சம்மாந்துறை பிரதேச சபை ஏற்பாட்டில் வருடாந்த ஒன்று கூடல்

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

சம்மாந்துறை பிரதேச சபை ஏற்பாடு செய்த வருடாந்த ஒன்று கூடல்   பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.மொஹம்மட் நௌஷாட் தலைமையில் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

சாக்கோட்டம் ஒட்டம்,  கைறு இழுத்தல், பலூன் உடைத்தல், சங்கீதக் கதிரை,  நீர் வலூன் மாற்றுதல்  உள்ளிட்ட பல்வேறு போட்டி நிகழ்வுகளுடன் நாடகம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. மொஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், சம்மாந்துறை  பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இம்முறை விசேடமாக சம்மாந்துறை பிரதேச சபையின் சாரதி செய்யது அகமது ஜெமீல் அற்பணிப்புடன் சேவை செய்தமைக் காகவும், வருடத்தில் மிகக் குறைந்த விடுமுறை பெற்றமை க்கவும் சிறப்பு விருது வழங்கிகௌரவிக்கப்பட்டார்.

இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள், கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுச் சின்னங்கள்  வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X