2025 மே 15, வியாழக்கிழமை

சம்மாந்துறையில் மோட்டார் வாகன கருமபீடம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 24 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கொரோனா வைரஸ் பரவல் அச்சத்துக்கு மத்தியில், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை, பொதுமக்களுக்கு இலகுவாக வழங்கும் பொருட்டு, கருமபீடம் ஒன்று, சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் அனுசரணையுடன், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பொதுமக்களுக்கு சுகாதார நடைமுறைகளைப் பேணி, சிரமமின்றி கடமைகளை முடித்துக் கொள்ளக் கூடியவாறு இலகுவாக அணுகக் கூடிய முறையில் இதனை அமைத்திருப்பது விசேட அம்சமாகும்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் எம்.ஐ றபீக், உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், கணக்காளர் ஐ.எம். பாரிஸ், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .