2025 மே 05, திங்கட்கிழமை

சர்வதேச மகளிர் தினம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இவ்வருட சர்வதேச மகளிர் தினத்தை, மார்ச் மாதம் 8ஆம் திகதி, அறுகம்பே - பசிபிக் உல்லாச விடுதி உள்ளக அரங்கில் நடத்தவுள்ளதாக, அச்சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜௌபர் தெரிவித்தார்

இவ்வருட இந்நிகழ்வில்  சிறந்த கிராமிய மகளிர் அமைப்புகளுக்கான விருது, சிறந்த பெண் சமூக சேவையாளர்களுக்கான விருது, பெண் ஊடகவிலளார்களுக்கான விருது,  சிறந்த பெண் வியபாரிகளுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், 10 வருடங்களுக்கு மேல் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில் சேவையாற்றிய பெண்களுக்கான விருது, சுற்றுலாத் துறையில் பணியாற்றிய பெண்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும்  வழங்கப்படுவதோடு, பொன்னாடைபோர்த்திக் கௌரவிப்பும் நடத்துவதற்கும்  ஏற்பாடுகள்   செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

தகைமையுடைய அனைத்துப் பெண்களும் இப்போட்டிகளில் பங்குகொள்ளுமாறு சம்மேளனம் வேண்டிக்கொள்வதோடு, தங்களுடைய தகவல்களை  info@chambertourism.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 1ஆம் திகதிக்கு  முன்னர்  அனுப்பி வைக்குமாறு, சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின்  தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X