Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 10 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
உயிர்த்த ஞாயிறுத் தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை, சிங்கள மொழியில் காணப்பட்டமையினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 திகதிக்கு வழக்கு மறுதவணை குறிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில், சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்னத்தின் கையெழுத்துடன் அவர் சார்பாக அரச சட்டவாதியினால் கல்முனை மேல் நீதிமன்றில் இன்று(10) தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய குற்றப் பகிர்வுப் பத்திரமானது கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் குற்றப்பத்திரமானது சிங்கள மொழியில் காணப்பட்டமையினால் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சந்தேக நபர், தமிழ் பேசும் ஒருவராக இருப்பதனால் குற்றப்பத்திரத்தில் உள்ள சகல விடயங்களையும் தமிழ் மொழியில் மாற்றி வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு குறித்த வழக்கினை ஆராய்ந்த நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.
இதன்போது சஹ்ரானின் மனைவியான பிரதிவாதி பாத்திமா ஹாதியா மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.அவர் நீதிமன்றத்திற்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டிருந்தார்.
49 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
2 hours ago