2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சாய்ந்தமருதில் கொரோனா தொற்றாளர் 51 ஆக அதிகரிப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கடந்த இரண்டு நாட்களில் சாய்ந்தமருது பிரதேசத்தில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்திருப்பதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார், இன்று (04) தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய குடும்ப உறவினர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏற்கெனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் உறவினர்கள் பலருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் ஞாயிறன்று 14 பேருக்கும் திங்களன்று 03 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

“இவர்கள் அனைவரும் உடனடியாக மருதமுனை மற்றும் பாலமுனை கொவிட்-19 நோயாளர்களுக்கான விசேட பராமரிப்பு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

“இதனைத் தொடர்ந்து இவர்களது குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், அவர்களுக்கும் தொடர்புடையவர்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .