2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சாய்ந்தமருதில் தேசிய பாதுகாப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், எம்.என்.எம்.அப்ராஸ்

தேசிய பாதுகாப்புத் தின நிகழ்வுகள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்  டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில், சாய்ந்தமருது லீ மரிடன் மண்டபத்தில் இன்று ( 26) நடைபெற்றன.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு முன்பாக, காலை 09 மணியளவில் தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு,   லீ மரிடன் மண்டபம் வரை பேரணியாகச் சென்றனர்.  

இதன்போது, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க  தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஆழிப்பேரலையால் உயிர்நீத்தோருக்கு, இரண்டு நிமிடங்கள் அக வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிரியாணி விஜய விக்கிரம, கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி.மொஹ்மட் றியாஸ், சர்வமத தலைவர்கள், 214 படையணியின் கட்டளை தளபதி கேணல் ஜானக விமலரத்ன, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரியபண்டார, முப்படையினர், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X