அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மன் - நியூரம்பேர்க் நகர சர்வதேச நட்புறவுத் திணைக்களத் தூதுக் குழுவினர், கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது ஹெய்ன்றிச் சுகாதார நிலையத்துக்கு, நேற்று (02) மாலை விஜயம் செய்தனர்.
அதன் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பில், கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபுடன் கலந்துரையாடலிலும் அக்குழுவினர் ஈடுபட்டனர்.
குறித்த நட்புறவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் நோர்பெர்ட் செஹுஜர்ஸ் அம்மையார் தலைமையிலான குழுவில், அதன் நியூரம்பேர்க் சர்வதேச தொடர்பாடல் அதிகாரிகள் மூவருடன், இலங்கைக்கான தொழில்நுட்ப ஆலோசகர் டொக்டர் பாமி இஸ்மாயில் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
சாய்ந்தமருது ஹெய்ன்றிச் சுகாதார நிலையத்தில் இடம்பெறும் சேவைகளைப் பார்வையிட்ட இத்தூதுக்குழுவினர், அங்கு நிலவும் குறைபாடுகள், தேவைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
இந்நிலையத்தில் மக்களுக்கான சேவைகளை மேலும் விஸ்தரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர்கள், அதற்கு வேண்டிய உதவிகளை வழங்குவதற்கு தமது நட்புறவுத் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .