2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சாய்ந்தமருது பொது நூலகத்துக்கு மாகாண மட்ட விருது

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய நூலக ஆவணாக்கல் சேவைகள் சபையால், அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட பொது நூலகங்களின் பாதுகாப்பு பேணல் தொடர்பான ஆய்வுப் போட்டியில், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பொது நூலகம், கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

இதற்காகக் கிடைக்கப்பெற்ற சான்றிதழ், விருது என்பவற்றை, சாய்ந்தமருது நூலகர் ஏ.சி.அன்வர் சதாத், கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபிடம், இன்று (26) கையளித்தார்.

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸும் பங்கேற்றிருந்தார்.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களில் நிலவி வருகின்ற குறைபாடுகள், தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மேயர் இங்கு சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X