2025 மே 05, திங்கட்கிழமை

சாய்ந்தமருது மத்தியஸ்தர் சபையின் தவிசாளராக அஸ்மீர் நியமனம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்கான மத்தியஸ்தர் சபையின் புதிய தவிசாளராக சேகு இஸ்மாயில் அஸ்மீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம், கடந்த 15ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.

மத்தியஸ்த சபை ஆணைக்குழுவால் 2017.09.27 அன்று நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில், சாய்ந்தமருது பிரதேச மத்தியஸ்தர் சபைக்கு 56 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு, மத்தியஸ்தர் பணி தொடர்பிலான பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற எழுத்துப் பரீட்சையின் பிரகாரம் தேர்வு செய்யப்பட்டு, இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X