2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சிங்கள பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கான; சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Freelancer   / 2022 ஜூன் 02 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு நிகழ்த்தப்பட்ட,  இரண்டாம் மொழி 200 மணித்தியாலய சிங்கள பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கான  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செந்நெல் சாஹிரா மகா வித்தியாலயத்தில்,  கடந்த 29.05.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வானது,  மொழி நிகழ்சித்திட்ட சம்மாந்துறை வலய இணைப்பாளரும் சம்மாந்துறை ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலைய முகாமையாளருமான திருமதி எம்.ஐ அஸீனாவின்  தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம் அமீர்,  அரசகரும மொழிகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஜே.பி பல்லவி ,  அரசகரும மொழிகள் திணைக்களத்தின் இரண்டாம் மொழி கற்கை நெறிக்கான வளவாளர் ஏ.எம்.எம் முஜீப் ,  சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய  தேசிய பாடசாலை அதிபர் ஏ.ஏ அமீர் மற்றும் செந்நெல் ஸாஹிரா மகா வித்தியாலய அதிபர் யு.எல்.எம் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

மேலும்,  அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்களப்பாட கற்கை நெறியின் வளவாளர் ஏ.எம். எம். முஜீப் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X