2025 மே 12, திங்கட்கிழமை

சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

எஸ்.கார்த்திகேசு   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில், சாகாம் குடிநிலம் கிராமத்தில், வீடொன்றின் பின்புறத்தில் குறை மாதங்களைக் கொண்ட சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கிராமத்தில், வயிற்றிலிருந்த கட்டி வெடித்துவிட்டதாக, அம்பியூலன்ஸ் ஊடாக, கல்முனை ஆதார வைத்தியசாலையின் அவரச சிகிச்சைப் பிரிவில், 38 வயதுப் பெண்ணொருவர், இம்மாதம் 22ஆம் திகதியன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை, வைத்தியர்கள் பரிசோதித்துப் பார்த்த வேளை, சிசுவொன்று பிறந்தமைக்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து, அப்பகுதி பொலிஸார், கிராம சேவை உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர் ஆகியோருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிசுவைத் தேடிவந்த போது, அப்பெண் குடியிருந்த வாடகை வீட்டின் பின்புறத்தில், நேற்று  (23) மாலை சிதைவடைந்த நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு இன்று (24) வருகைதந்த அம்பாறை குற்றத் தடயவியல் பொலிஸார்,  தடயவியல், வாக்குமூலங்களைப் பெற்றுகொண்டனர்.

மேற்படி பெண், கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மேலதிக விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X