Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 ஜனவரி 25 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வீட்டுக்கும் யானைக்கும் கைக்கும் போடும் வாக்குகள் ஒன்றுதான். வீட்டுக்கு வாக்குப் போட வேண்டும் என்று யாரும் நினைத்தால் அது யானைக்கு போட்டதுக்குச் சமன் அல்லது கைக்குப் போட்டதுக்குச் சமன்” என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, உன்னிச்சைப் பிரதேசத்தில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச சபைக்காகப் போட்டியிடும் சண்முகம் நடராசாவின் பிரசார அலுவலகத்தை, நேற்று (24) மாலை திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
“தேர்தல் வரும் போது, தமிழரசுக் கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டுமென்ற தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. தமிழரசுக் கட்சியை வெற்றிபெறச் செய்தால்தான் அரசாங்கத்துக்கு வெற்றி கிட்டும். தற்போது வீட்டுக்கும் யானைக்கும் பொடும் வாக்கும் ஒன்றுதான்.
“ஏனென்றால், தமிழ் மக்களின் வாக்குகளை வாங்கிக் கொண்டு, அலரி மாளிகைக்குள்தான் இருக்கிறார்கள். அரசாஙகத்தை சர்வதேச ரீதியிலும் பாதுகாத்துக் கொண்டு, உள்நாட்டுக்குள்ளும் பாதுகாத்துக் கொண்டு, அரசாங்கம் கொண்டுவரும் சகலதுக்கும் ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச சபைக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.
31 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago