2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சிப்தொர புலமைப்பரிசில் வழங்கல்

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.ஜி.ஏ.கபூர்

சமூக அபிவிருத்தித் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சமுத்தி சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்தி பெறும் பயனாளிகளின் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதி பெற்ற மாணவர்களுக்கு “சமுர்த்தி சிப்தொர கல்விப் புலமைப்பரிசில்” வழங்கும் வைபவம், நேற்று (10) நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸான் அதிதியாகக் கலந்துகொண்டார்.

2017/2019ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் கற்கும் 61 மாணவர்களும், 2018/2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் கற்கும் 48 மாணவர்களும், 2019/2021ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் கற்கும் 122 மாணவர்களும் என, மொத்தம் 231 மாணவர்கள் புலமைப்பரிசில் கொடுப்பனவைப் பெற்றனர்.

ஒவ்வொரு மாணவருக்கும் தலா 36 ஆயிரம் ரூபாய் வீதம் 231 மாணவர்களுக்குமாக மொத்தம் 83 இலட்சத்தி 16 ஆயிரம் ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .