Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2018 ஜூலை 11 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமுர்த்தி 'சிப்தொற' புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு, நாடளாவிய ரீதியிலுள்ள 15,000 மாணவர்களைத் தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சைகள், பிரதேச செயலகம் தோறும் நடைபெற்று வருகின்றன.
சமுர்த்தி, நிவாரணம் பெறும் குடும்பங்களின் திறமைகள், தகுதிகள் உள்ள மாணவர்கள் எதிர்கொள்ளும் நிதி ரீதியான கஷ்டங்கள் காரணமாக உயர் கல்வியிலிருந்து விலகிச் செல்வதைத் தவிர்க்கும் பொருட்டும், சமுர்த்தி பயனாளிகளின் பிள்ளைகளின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்கிலும், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனூடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்திப் பயனாளிக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தெரிவுசெய்யும் நேர்முகப் பரீட்சைகள், பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில், கடந்த 09ஆம், 10ஆம் திகதிகளில் நடைபெற்றன.
பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில், தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன், ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை அதிபர் கே.சோமபால உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
2018/2020 கல்வியாண்டில் உயர்தரம் கற்கும் 85 மாணவர்கள் பங்கேற்ற நேர்முகப்பரீட்சையில், கல்வி, குடும்ப, வருமான நிலை ஆகியவற்றைக் கவனத்திற்கொண்டு, 17 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும், மாதாந்தம் 1,500 ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு 36,000 ரூபாய் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
2 hours ago
2 hours ago