2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறிய வைத்தியசாலைகளில் அம்புலன்ஸ் சேவை

Freelancer   / 2022 ஜூலை 13 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட சிறிய வைத்தியசாலைகளின் அம்புலன்ஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் இன்று புதன்கிழமை (13) தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறையினால் மின்சாரம் தடைப்படும் போது வைத்தியசாலைகளிலுள்ள ஜெனரேட்டர்களை பாவனைக்குட்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சில வைத்தியசாலைகளின் அம்புலன்ஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ஆதார, மாவட்ட வைத்தியசாலைகளின் அம்புலன்ஸ் சேவைகள்  நடைபெறுவதாகவும்  தெரிவித்தார்.

வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்களுக்கு கிழக்கு மாகாண சபையினால் எரிபொருளுக்காக வழங்கப்படுகின்ற நிதி தற்பொழுது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் சில சிறிய வைத்தியசாலைகளில் அத்தியாவசிய சேவைகளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கிளினிக்,சிறுவர்களுக்கான கிளினிக் போன்றவை வழமை போன்று இயங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கான சுகாதார சேவையினை வழங்க வேண்டியுள்ளது.  குறிப்பாக கர்ப்பவதியான தாய்மார்கள் சிறுபிள்ளைகளுக்கான கிளினிக்குகள் மற்றும் அவர்களுக்கான மாத்திரைகள் முறையாக வழங்குதல் போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

கர்ப்பிணி தாய்மார்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு மக்கள் பல சிக்கல்களை எதிர்கொள்வதோடு ஓரிரு மரணங்களும் சம்பவித்த துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலுள்ள பொதுச் சுகாதார மாது,வாகன உரிமையாளர்கள் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தர்கள் சம்பந்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள மதத் தலைவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டு சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வாகன உரிமையாளர்கள் நெருக்கடியான இக்கால கட்டத்தில் அவசர நோயாளிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கு முன்வருமாறு கேட்டுள்ளார். சில சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் குறித்த வாகனங்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கு மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்தரையாடி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான கால கட்டத்தில் அரசாங்கத்தை முழுமையாக நம்பி இருக்காமல் பொதுமக்களும் சில செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .