2025 மே 14, புதன்கிழமை

சிறுபோக நெற் செய்கையில் நோய்த் தாக்கம்

Editorial   / 2020 மே 13 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் நிலையப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் தற்போது 2020 சிறுபோக நெற்செய்கையில் “எரிபந்தம்” எனும் நோய் பரவி வருவதாக, கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியும் விவசாய போதனாசிரியருமான வீ. நாகேந்திரன், இன்று (13) தெரிவித்தார்.

நெல்லில் ஏற்படும் நோய்களில் எரிபந்தம் மிகவும் கூடிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகுமென்றும் நெற் தாவரத்தின் எந்தவொரு வளர்ச்சிப் பருவத்திலும் தொற்றக் கூடிய இந்தப் பங்கசு, இலையின் மேற்பரப்புத் தண்டின் கனுக்கள் அல்லது கதிர்கள், நெல் மணிகளின் மீது கரைகளை உருவாக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

“எரிபந்தம் பங்கசு, தண்டின் கனுக்களில் தொற்றும் போது, அவ்விடம் கறுப்பு நிறமாக மாறி, தண்டு அவ்விடத்தில் முறிந்து விழும். இலை மடலின் சோனை, கறுப்பு நிறமாக மாறி அது இலகுவில் முறியும். கதிரின் கழுத்துப் பகுதியில் பங்கசு தொற்றும் போது, அது கறுப்பு நிறமாக மாறி முறிந்து விடும். இது கழுத்தழுகள் எனப்படும். இவைகள் நோயின் அறிகுறிகளாகும்.

“இவ் அறிகுறிகள் தென்பட்டால், விவசாயிகள் உடனடியாக அதற்குத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்”என கேட்டுள்ளார்.

எதிர்ப்புத் தன்மை கொண்ட வர்க்கங்களை செய்கை பண்ணல், சரியான அளவில் சிபாரிசு செய்யப்பட்ட பசளைகளை இடல் என்பன நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான இடத்தை வகிக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நோய்ப் பரவல் அதிகமாக காணப்பட்டால், பங்கசு நாசினியான 'டெபியுகொனசோலை' விசுருதல் வேண்டுமெனவும், அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விவசாயிகளுக்கு துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணர்வூட்டப்பட்டு வருவதாகவும், மேலதிக விவரங்களை விவசாயப் போதனாசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளுமாறு, விவசாயிகளைக் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X