எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் சிறுபோக நெற்செய்கையைக்கான விதைப்பு வேலைகளை நிறைவுசெய்யுமாறு அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் நேற்றைய தினம் (16) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை 48,120 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், அம்பாறை டீ.எஸ். சேனநாயக்க சமுத்திரத்தில் 12 வீதமான நீர் மட்டம் காணப்படுவதாகவும், தற்போது 96,400 அடி நீர் மாத்திரம் உள்ளதாகவும், இந்நீர் சுமார் 26,500 ஏக்கர் காணிகளில் வேளாண்மை செய்கை மேற்கொள்வதற்கு முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மத்திய நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட றம்புக்கன் ஓயா, நீத்தை, இலுக்குச்சேனை, பாணாமை, லகுகல, கெல்பிட்டி ஆகிய நீர்ப்பாசன பிரிவுகளில் சுமார் 4,200 ஏக்கர் நிலப்பரப்பிலும, மகாவலி நீர்ப்பாசனப் பிரிவுக்குடப்பட்ட தெஹியத்தக் கண்டி பிரதேசத்தில் சுமார் 13,420 ஏக்கரிலும் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மாகாண நீர்ப்பாசனப் பிரிவுக்குபட்ட சடயந்தலாவ, நாவுக்கல்ல, சாகாமம், செம்மணி ஆகிய நீர்ப்பாசனப் பிரிவில் சுமார் 1,680 ஏக்கர் நிலப்பரப்பிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மகாவலி சிறிய நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட பிரிவுகளில் சுமார் 2,320 ஏக்கரிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
கடந்த வருடங்களை விட இம்முறை குறைந்த நிலப்பரப்பிலேயே வேளாண்மை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் மேலும் தெரிவித்தார்.
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago