Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 03 , பி.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் 2021ம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்புப் பணிகளை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டுமென, அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேச கல்லோயா வலது கரை நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட பிரிவுகளில் 2021க்கான சிறு போக நெற்செய்கைக்கான கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (02) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மாவட்டச் செயலாளர், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இம்முறை அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா நீர்ப் பாசண பிரிவில் 01 இலட்சத்தி 20 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, அக்கரைப்பற்று வதிவிட திட்ட முகாமையாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 24 ஆயிரத்தி 10 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
“சேனநாயக்க சமுத்திரத்தில் 04 இலட்சத்து 16 ஆயிரத்து 800 ஏக்கர் அடி நீர் காணப்படுகின்றது. இதன்படி, சிறுபோகத்துக்கான விதைப்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
“நீரை வீண் விரையம் செய்யாது தேவைக்கேற்றவாறு பயன்படுத்தி, எதிர்வரும் போகங்களில் நெற்செய்கை பண்ணுவதற்குரிய செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். இது விவசாயிகளின் கையில் தங்கியுள்ளது.
“தீர்மாணிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் விதைப்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டாமெனவும், இங்கு நிறைவேற்றப்படும் தீர்மாணங்களை சகலரும் பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட விவசாயிகள் நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றார்கள். 16 மாவட்டங்களில் நெல் உற்பத்தி செய்கை பண்ணப்படுகின்ற போதிலும் அம்பாறை மாவட்டம் 25 வீதமான நெல் உற்பத்தியை ஈட்டி தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுஜித கமகே, மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர், கல்ஓயா வலதுகரை திட்ட முகாமையாளர் எஸ்.எல்.ஏ. அன்சார், அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியலாளார் ரீ. விவேக் சந்திரன், பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ. நஸீல் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகளும், விவசாய அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago