Freelancer / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் காணாமல் போயுள்ளதாக சிறுவனின் தந்தை, இன்று திங்கட்கிழமை (26) முறைப்பாடு செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனின் தாயாரும் சொறிகல்முனையைச் சேர்ந்த தந்தையாரும் விவாகரத்து செய்துள்ள நிலையில், தீபன் சயான் என்ற குறித்த சிறுவன் தந்தையாருடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) வீரமுனை பகுதியில் மரண வீடு ஒன்றுக்கு தந்தையார் சிறுவனை அழைத்துச் சென்ற நிலையில், சிறுவன் காணாமல் போயுள்ளார்.
எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (N)
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026