எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் 5 வயதுச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக இனங்கானப்பட்ட ஒருவருக்கு, 13 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டணையும் 40,000 ரூபாய் அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 1 இலட்சத்தி 50,000 ரூபாய் செலுத்துமாறும், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க உத்தரவிட்டார்.
கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி, பாடசாலைக்குச் சென்ற குறித்த சிறுவளைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
இவ்வழக்கு விசாரணை, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (08) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு, சிறுவனைக் கடத்திய குற்றத்துக்க்காக 1 வருட கடூழிய சிறைத் தண்டணையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளதோடு, பாலியல் துஷ்பிரயோகத்துக்காக 12 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 1 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும், அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், ஒன்றரை வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
வழக்காளி சார்பில், அரச சட்டத்தரணி மலீக் அஸீஸ் மன்றில் ஆஜராகியிருந்தார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago