2025 மே 14, புதன்கிழமை

சிறுவர் இல்லங்களுக்கு நிவாரணம் அளிப்பு

Editorial   / 2020 மே 17 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கொரோனா அச்சத்துக்கு மத்தியில், அம்பாறை மாவட்டத்தில் இயங்கிவரும் 6 சிறுவர் இல்லங்களுக்கு, அங்குள்ள சிறுவர் தொகைக்கேற்ப வழங்கப்படவிருக்கின்றன என ஜனாதிபதி கொவிட் 19 இல்லங்களுக்கான செயலணிக் குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் சுவாட் அமைப்பின் தலைவருமான வடிவேல் பரமசிங்கம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சிறுவர், முதியோர், பெண்கள் பாதுகாப்பு இல்லங்களின் பொறுப்பாளர்களுக்கான கூட்டமொன்று, காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய இணைப்பாளர் பரமசிங்கம் மேலும் கூறியதாவது,

“கொரோனா காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் பல இல்லங்கள் செயலற்றுள்ளன. சிறுவர்கள் அவர்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். எனினும், 6 இல்லங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் தற்போதும் இயங்கிவருகின்றன. அவைகளுக்குரிய உணவு, மருந்து, ஏனைய தேவைகள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளன.

“அதற்காக, யு.எஸ்.எய்ட் அமைப்பின் ஐடியா செயற்றிட்டத்தின் கீழ், பல உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதனை மனித எழுச்சி நிறுவனம் முன்கொண்டுசெல்ல இருக்கின்றது.

“இதன்படி, 8 தொடக்கம் 12 பேருள்ள இல்லங்களுக்கு 50,000 ரூபாய் பொதிகளும் 12 -20 பேர் வரையுள்ள இல்லங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொதிகளும் 20க்கு மேற்பட்டவர்களையுடைய இல்லங்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொதிகளும் வழங்கப்படவுள்ளன” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X