2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சிற்றுண்டி விற்பனை வாகனங்களில் ஒலி எழுப்பத் தடை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, காரைதீவு பிரதேசத்திற்குள் காலை மற்றும் மாலை வேளைகளில் சிற்றூண்டி விற்கும் வாகனங்களில்  ஒலி எழுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் இன்று  (05) தெரிவித்தார்.

குறித்த வாகனங்கள் கூடிய சத்தத்துடன் சினிமாப் பாடல்களை இசைத்த வண்ணம் திரிவதால் சிறுவர்கள்,நோயாளர்கள் மற்றும் க.பொ.த. உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அ​சௌகரியத்துக்கு முகங்கொடுப்பதாகவும், இவர்களின்  நன்மை கருதியே ஒலி எழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதென கூறினார்.

இந்த ஒலி பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளதென பெற்றோர்கள் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.

இந்தத் தடையுத்தரவை மீறுபவர்கள் தொடர்பில், 0674929112 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும், பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர், இவர்களுக்கெதிராக  சட்ட நடவடிக்கை  எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X