Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 18 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
மூவின மக்களும் விரும்பும் ஆட்சியாக அமைய வேண்டுமென வாழ்த்துவதாக சிலோன் மீடியா போரம் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத், பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் ஒப்பமிட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களில் அதிகமானவர்கள் தங்களின் தலைமைத்துவத்தினை ஏற்று வாக்களித்துள்ளனர். இதே போன்று வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் இத்தேர்தலில் அவர்களின் சமூகம் சார்ந்த அரசியல் தலைமைகளின் வழிநடாத்தலில் வாக்களித்துள்ளார்களே தவிர அம்மக்கள் தங்களுக்கு எதிரானவர்களல்ல.
இதனை அவர்களின் ஜனநாயக உரிமையாக தாங்கள் பார்க்க வேண்டும். தங்களது நீதியான, நியாயமான சிறந்த ஆட்சியினால் அம்மக்களின் மனங்களை வெற்றி கொள்ள வேண்டும் என்பதே எமது அவாவாகும்.
நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமாதானம் கட்டியெழுப்படல் வேண்டும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் நாட்டின் அபிவிருத்தி பிரதேச வேறுபாடுகளின்றி மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பாகுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago