2025 மே 08, வியாழக்கிழமை

‘சுகாதார சேவையில் இனவாதம் இல்லை’

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, சகா

சுகாதார சேவை மதமற்ற ஒன்றெனவும் இனவாதமாக இங்கு யாரும் செயலாற்ற முடியாதெனவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில், சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட விபத்துகள், அவசர சிகிச்சைப் பிரிவின் கட்டடத்தை, சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இன்று (29) திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, சுகாதார இராஜாங்க அமைச்சர் மேற்கட்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தொற்றா நோய்கள் வராமல் தடுக்கும் மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜித, ஏழை மக்களின் துயரங்களுக்குத் தீர்வு காணும் வகையில், பல சுகாதாரத் திட்டங்களை வகுத்துச் செயலாற்றுகின்றார் என்றார்.

மேலும், ஏனைய மாவட்டங்களைப் போன்று அம்பாறை மாவட்டத்திலும் சுகாதாரத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வைத்தியத்துறை சார்ந்தோர் இனவாதம் பாராமல் இலங்கையர்களாகச் சேவையாற்றத் தயாராக இருக்க வேண்டுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X