Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 நவம்பர் 25 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பொத்துவில் மண்மலைக்கு அருகாமையில், ரஹ்மத் நகர் கிராமத்தில் செயலிழந்து காணப்படுகின்ற சுகாதார மத்திய நிலையத்தைப் புனரமைத்து, மீளத் திறக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சுகாதார நிலையத்தில், தொடர்ச்சியாக 06 வருடங்களாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சைகள், சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் ஆகியன இடம்பெற்று வந்துள்ளன.
இந்நிலையில், அருகாமையிலுள்ள பொத்துவில் மணல் மலையிலிருந்து அள்ளுண்டு வந்துள்ள மணலால், சுகாதார நிலையம் மூடப்படும் நிலை ஏற்பட்டதால் அது கைவிடப்பட்டு, தற்போது செயலிழந்து காணப்படுவதாக, மக்கள் தெரிவித்தனர்.
எனவே, இப்பிரதேசத்திலுள்ள கற்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் சிகிச்சைகளுக்காக பொத்துவில் நகரிலுள்ள சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு சுமார் 04 கிலோமீற்றருக்கு அப்பால் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பணம், நேர விரயம் என்பவற்றுக்கு ஆளாகி வருவதாகவும், மக்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், இக்கட்டடம் பாழடைந்து காணப்படுவதால், நாசகார செயல்கள் இடம்பெறுவதாகவும், இதனால் இப்பகுதியில் இரவு வேளையில் ஓர் அச்ச நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
எனவே, இச்சுகாதார நிலையத்தைப் புனரமைத்து மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இதனை எதிர்காலத்தில் ஒரு மத்திய மருந்தகமாக ஏற்படுத்தித் தருமாறும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago