2025 மே 12, திங்கட்கிழமை

சுனாமி அனர்த்த ஒத்திகை நாளை

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

சுனாமி அனர்த்தத்தின்போது வெகுவாகப் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களை விழிப்பூட்டும் வகையில், அனர்த்த முன்னாயத்த ஒத்திகை நிகழ்வுகளும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளும், அம்பாறை மாவட்டத்தில், நாளை (20) முன்னெடுக்கப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு, அட்டாளைச்சேனையில் இன்று (19) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “அக்கரைப்பற்று, லகுகல, பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை, கல்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்கள் மூலம் விசேட சுனாமி அனர்த்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும், அனர்த்தக் குறைப்பு ஒத்திகை செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

“இவ்வேலைத் திட்டத்தின் மூலம், பொதுமக்கள் அனர்த்த நிலைமையை எவ்வாறு எதிர்கொண்டு தம்மை பாதுகாப்பதோடு, தமது உடைமைகளை எவ்வாறு கையாள்வது போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்படவுள்ளன” எனத் தெரிவித்தார்.

அத்துடன், சுனாமி அனர்த்தத்தின்போது, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பலர் பல்வேறான பாதிப்புக்களை எதிர்நோக்கினர் எனச் சுட்டிக்காட்டியதுடன், “அவ்வாறான பாதிப்புக்களும் இழப்புக்களும் இனிமேலும் நிகழ்ந்து விடக் கூடாது என்ற நோக்கின் அடிப்படையில், இவ்வேலைத்திட்டத்தை மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக நாம் மேற்கொள்கின்றோம்” என்றார்.

மேலும், “இச்செயற்றிட்டத்தை நாம் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் மேற்கொள்ளவுள்ளதால் ஏனைய மாவட்ட மக்கள் பீதியடையத் தேவையில்லை” என்றார்

இதேவேளை, இம்மாதம் 26ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய பாதுகாப்புத் தினத்தை, கல்முனை சாஹிரா கல்லூரியில் அனுஷ்டிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X