2025 மே 12, திங்கட்கிழமை

சுனாமி வீட்டுத் தொகுதியின் கழிவறைக்குழி பெருக்கெடுப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கடந்த சில நாள்களாக பெய்துவரும் பலத்த மழையையடுத்து, காரைதீவு 3ஆம் பிரிவிலுள்ள சுனாமி மீள்குடியேற்ற மாடிவீட்டுத்தொகுதியின் கழிவறைக்குழிகள் நிரம்பி, வெடித்துப் பெருக்கெடுத்துள்ளன.

இதனால், அங்கு துர்நாற்றம் வீசியதுடன் மக்கள் பலத்த அசௌகரியத்துக்குள்ளானார்கள். அங்குள்ள குடியிருப்பாளர்கள் வெளியேறத் திட்டமிட்டு, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலிடம் தகவல்கொடுத்தனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த தவிசாளர், குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடியதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரை தற்காலிகமாக மாடிவீட்டுத் தொகுதியின் மேட்டு நிலப்பக்கம் வசிக்க வசதியளிப்பதாகவும் கூறினார்.

தவிசாளர் ஜெயசிறில், அங்கிருந்தவாறு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளோடு தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இப்பிரச்சினையை, முன்பே தீர்க்கவேண்டுமென்பதற்காகவே முன்னாள் அமைச்சர் மனோ கணேசனிடம் சென்று 20 இலட்சம் ரூபாய் நிதியைத் தான் கொண்டுவந்ததாகவும் ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவேண்டியது பிரதேச செயலகமாக இருப்பதாகவும், தவிசாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜனிடம் கேட்டபோது, அந்நிதியைப் பயன்படுத்த கால அவகாசம் போதாமையால் அதனைத் திருப்பி அனுப்பப்போவதாகத் தெரிவித்தார்.

மேற்படி நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றமை தொடர்பாக சுமார் 04 மாதங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X