2025 மே 05, திங்கட்கிழமை

சுற்றுச் சூழல் பாதிப்பு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 நவம்பர் 26 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனைக் கிராமத்தின் சுற்றாடல், நாலா பக்கங்களிலும் பல்வேறு நடவடிக்கைகளால் மாசடைந்து வருவதுடன், ஆபத்தான சூழலையும் எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், அங்குள்ள தொழில்சார் நிலையங்களால் பாரிய பௌதீக சுற்றாடல் பாதிப்புகள் ஏற்படுவதுடன், ஆபத்தான தொற்று, தொற்றாநோய்களும் பரவலாமென சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்விடயத்தில், பாலமுனை சிவில் சமூக அமைப்புகள் அவதானத்தை செலுத்துவதுடன், பாலமுனை பல்கலைக்க​ழக மாணவர்கள் இதுதொடர்பில், ஆய்வு செய்ய முன்வர வேண்டுமெனவும் மக்கள் கோருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X